சேலம் அருகே இட்லிக்குள் விஷம் வைத்து தின்று பெண் தற்கொலை
வீரபாண்டி |

சேலம் அருகே இட்லிக்குள் விஷம் வைத்து தின்று பெண் தற்கொலை

சேலம் கொண்டலாம்பட்டி பனங்காடு ஆண்டிப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் பாஷா முகைதீன். இவர் வேடுகத்தாம்பட்டியில் மளிகை கடை வைத்துள்ளார். அவரது மனைவி தாசன் பரிதா (29) இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தாசன் பரிதாவுக்கு முதுகுத்தண்டில் வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் இட்லிக்குள் விஷத்தை வைத்து சாப்பிட்டு விட்டார். மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் சொந்த ஊரான மதுரை கரும்பாலை கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி கொண்டலாம்பட்டி காவல்நிலைய உதவி கமிஷனர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


தமிழ் நாடு