கணினி சான்றிதழ் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வுகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. தேர்வில் மொத்த தாள்களின் எண்ணிக்கை 2-லிருந்து 4 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமானால் ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். அதோடு ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும்.