ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துரை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், “அரசியலுக்கு வர முடிவு செய்தபோது நிறைய பேரை சந்தித்தேன். நிறைய பேர் ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டால் அவ்வளவுதான். நிம்மதியை இழந்து விடுவோம். தெரிந்து சொல்கிறார்களா.. தெரியாமல் சொல்கிறார்களா என தெரியாது” என்று கூறினார். ரஜினிகாந்த் இப்படி சொல்லியதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.