கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நவம்பர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும்.