பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராபி சிறப்பு பருவ சின்ன வெங்காய பயிருக்கு வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்துக்கொள்ள விவசாயிகளுக்கு பெரம்பலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டு தொகையை பெற்று பயன்பெறலாம். மேலும், சின்ன வெங்காய பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு பிரீமியம் தொகை ரூ.2060 செலுத்த வேண்டும்.