கருமந்துறை: 300 பயனாளிகளுக்கு கறவைமாடு வழங்கிய அமைச்சர்

58பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கருமந்துறையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடியினர் தின விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து வருவாய்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, தாட்கோ மூலம் ரூ. 1 கோடியே பதினாறு இலட்சத்து 68, 046 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 300 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினார். மேலும் நிகழ்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட கறவை மாடுகளுக்கு போதிய உணவு, குடிநீர் இல்லாததால் கூச்சலிட்டவாறு இருந்தன.

தொடர்புடைய செய்தி