நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த அக்டோபரில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தவெக-வின் இலக்காக உள்ளது. விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவர் மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். 2025 பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் தீவிர அரசியலில் களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.