மகளை புகுந்த வீடு அனுப்ப ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த தந்தை

79பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ரபுரா பகுதியில் சுபாஷ் சிங் மகள் அஞ்சலி ராஜ்புத் என்பவருக்கும் மணமகன் அமானுக்கும் இடையே கடந்த 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனது மகளை ஹெலிகாப்டர் மூலம் மருமகனுடன் புகுந்த வீட்டுக்கு சுபாஷ் சிங் அனுப்பி வைத்துள்ளார். மணமகளின் சொந்த ஊருக்கும், அவரது கணவரின் ஊருக்கும் இடையே 14 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இந்த 14 கி.மீ தூரத்தை ஹெலிகாப்டர் மூலம் கடப்பதற்கு ஹெலிகாப்டருக்கு ரூ.8 லட்சத்தை மணமகளின் தந்தை செலவழித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி