கர்நாடகாவை சேர்ந்த பசவம்மா ராஜேஸ்வரி என்பவரின் கணவர் உயிரிழந்த நிலையில், ஷீலாவந்த் என்பவருடன் பசவம்மாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பசவம்மாவின் தோழியான சசிகலாவிற்கு தெரியவரவே பசவம்மாவை கண்டித்துள்ளார். இதனால் ஷீலாவந்த்துடன் பேசுவதை பசவம்மா தவிர்த்துள்ளார். இதனால் சசிகலாவை பழிவாங்க நினைத்த ஷீலாவந்த், ஹேர் ட்ரையரில் டெட்டனேட்டரை வைத்து கொரியர் அனுப்பியுள்ளார். அப்போது, சசிகலா வீட்டில் இல்லாத நிலையில், ஹேர் ட்ரையரை வாங்கி ஆன் செய்த பசவம்மாவின் கைவிரல்கள் துண்டாகியுள்ளன.