தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (நவ.24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.25) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.