அறந்தாங்கியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, பொதுமக்களின் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தின் முன் கண்ணாடி நொறுங்கியது. மேலும், பேருந்து நடத்துநர் மற்றும் சாலையில் சென்ற இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.