குற்றாலத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 2 நாட்களாக மழை இல்லாத நிலையில், பகலில் வெயிலும் அவ்வளவாக இல்லை. வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. கடந்த ஒரு காலத்தில் 5 நாட்கள் பிரதான அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.