தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இந்த ஊரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். இங்குள்ள சுனையில் குளித்தால் தீராத நோய்களும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பட்ட கடன் தீரவும், இட்ட துயர் மாறவும் இத்தலம் வந்து அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் அவை மாறிவிடுகிறது. துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை அருள்கிறார் அருஞ்சுனை காத்த அய்யனார்.