திருத்துறைப்பூண்டியை சேர்ந்த உதய பிரகாஷ், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஹேமா என்ற இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், உதய பிரகாஷின் சித்தி வீட்டில் இருவரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், இன்று (நவ.24) வீட்டின் ஜன்னலில் ஹேமா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை கண்ட உதய பிரகாஷ் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.