சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காந்திநகர் அருகே விவசாயத் தோட்ட பகுதி உள்ளது. அப்பகுதியில் நேற்று மாலை பொதுமக்கள் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் விவசாயத்தோட்ட வழியே சென்ற மலைப் பாம்பை பிடித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டுப் பகுதியில் விட்டனர்