சேலம்: தம்பியுடன் தகராறு.. அண்ணன் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த ராஜ்குமாருக்கு இரண்டு மகன் கிருபாநாத் மற்றும் தம்பி ரவிபிரசாத் இரு மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே நேற்று இரவு 08(அக்) வீட்டில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக அண்ணன் கிருபா நாத் தம்பி ரவி பிரசாதை அருகே இருந்த கத்தியில் தொண்டைப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தம்பி ரவிபாரசாத் சத்தம் போடவே அக்கம்பக்கத்திரர் வருவதற்குள் அண்ணன் கிருபாநாத் தம்பியை குத்திய பயத்தில் அருகே இருந்த அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் தம்பி ரவி பிரசாத்தையும் அண்ணன் கிருபா நாதத்தையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அண்ணன் கிருபாநாத் ஏற்கனவே உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தம்பி தீவிர சிகிச்சை பிரிவில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் தம்பி இனிய ஏற்பட்ட வாய் தகராறு தம்பியை குத்திய அண்ணன் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.