டெய்சுகே ஹோரி (40) என்ற ஜப்பானிய நபர், தனது வாழ்நாளை இரட்டிப்பாக்க ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடம் என்ற கடினமான தூக்கத்தை கடைபிடித்துள்ளார். மேற்கு ஜப்பானின் ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டெய்சுகே, 12 ஆண்டுகளுக்கு முன் தனது தூக்க நேரத்தை குறைக்க தொடங்கியுள்ளார். ஒரு ரியாலிட்டி ஷோவில், அவர் வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே தூங்கியுள்ளார். இந்த நடைமுறை அவரது வேலை திறனை பெரிதும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.