கெங்கவல்லி - Gangavalli

போதைப்பொருள் நடமாட்டம் அதிகம்: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

போதைப்பொருள் நடமாட்டம் அதிகம்: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தலைவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான ராமசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: - தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்து பேசி உள்ளனர். தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து வருவதை அறிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஏற்பாடு செய்தார். தற்போது தி.மு.க. ஆட்சி காலத்திலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்வி பயில இடம் கிடைத்த மாணவ-மாணவிகள் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా