சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடைக்கால பயிர்களுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வெண்டை, வெங்காயம், தக்காளி பயிர்களுக்கு வரும் ஆக. 31ஆம் தேதி வரை காப்பீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பிரிமீயம் தொகையாக ஒரு ஏக்கருக்கு வெண்டை ரூ. 1,264, வெங்காயம் ரூ. 2,050 மற்றும் தக்காளிக்கு ரூ. 1,017 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.