மகளை 5 வயது முதல் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 37 வயது தந்தைக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருவிகாரா பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான இவர், தனது முதல் மனைவி இறந்துவிட்டதால் மறுமணம் செய்துகொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை 1ஆம் வகுப்பில் இருந்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமி 10ஆம் வகுப்பு படிக்கும் போது உண்மை தெரியவந்துள்ளது.