சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தலைமையில், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் அடுத்த சிறுவாச்சூர் பகுதியில், மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.