சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காம நாதீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் திருத்தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் நேற்று அலங்கரிக்கப்பட்ட 45அடி உயரம் கொண்ட தேரில் மூலவர் காம நாதீஸ்வரர் வெள்ளிக் கவசம், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்கள் பெண்கள் என தேரை வடம் பிடித்து இழுக்க அப்பகுதியின் முக்கிய சாலைகள் வீதி வழியாக தேர் வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் ஆறகளூர் பெரியேரி நத்தக்கரை தியாகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.