சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே பச்சமலை அடிவார பகுதியான நரிப்பாடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் குறிப்பட்ட நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள், கரைக்காரர்கள் கோவிலுக்கு வேண்டும் என செல்வகுமாரிடம் கேட்டதால் அதற்கு செல்வகுமார்தர மறுத்ததால்ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது அக்கா ராஜம்மாள் கணவர் உயிரிழந்த நிலையில் செல்வகுமார் சென்றதால் ராஜம்மாள் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜம்மாள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கெங்கவல்லி போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராஜம்மாள் கூறும் பொழுது
தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், எங்கள் வாழ்வாதாரத்திற்கான நிலத்தை கேட்பதால் அதனை தர மறுத்ததால் அதற்காக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் கூட மற்ற குழந்தைகளிடம் எங்கள் வீட்டு குழந்தைகளிடம் பேசக்கூடாது என கூறுகின்றனர். எங்களின் குழந்தைகளின்எதிர்காலத்தில்இதுபோன்றுநடக்கக்கூடாதுஎனவேதனையோடுதெரிவித்தனர்.