தலைவாசல் ௯லித்தொழிலா ளி வீட்டில் 7 பவுன் 25 ஆயிரம் கொள்ளை

83பார்த்தது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நத்தகரை சுங்கச்சாவடி பகுதியில் வசிப்பவர் காவலன் மனைவி அமராவதி (55). கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கத்தியை காட்டி விரட்டியுள்ளனர். அப்போது எங்கு ஆசிரியராய் வேலை செய்கிறாய் நேற்று வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தது எங்கே என கேட்டு மிரட்டியுள்ளனர். 

அதற்கு அமராவதி நான் கூலி வேலை செய்யக்கூடியவர் என கூறியுள்ளார். தொடர்ந்து வீடு மாறி வந்துவிட்டோம் எனக்கூறி அமராவதியிடம் இருக்கும் நகையை கொடு என மிரட்டி கழுத்து, காதில் அணிந்திருந்த ஏழு பவுன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 25,000 ரூபாய் ரொக்கத்தையும் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி