சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கடந்த அக்டோபர் மாதம் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் வார்டு உறுப்பினர்கள் கலிய வரதராஜ், வரதராஜன், திருச்செல்வன், நடராஜ் ஆகியோர் கூட்டத்தில் தகாத வார்த்தையும் பேசியதாகவும், பேரூராட்சி மன்ற தலைவரை ஒருமையில் பேசியதாகவும் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் இவர்களிடம் விளக்கம் கேட்டு பேரூராட்சிகளின் ஆணையாளரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்தபிப்ரவரி மாதம் கூட்டு அரங்கில் இருந்த நான்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் தீர்மானங்களை முழுமையாக வாசிக்க விடாமலும் சபையில் அநாகரிகமாகவும் நடந்து கொண்டதாகவும், அப்போது திடீரென வார்டு உறுப்பினர் செந்தில் என்பவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நால்வர்கள் மீதும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் விதிகளின்படி இரண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில்கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்து பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.