சேலம் மாவட்டம் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்து வந்தனர் இந்த நிலையில் திடீரென் கெங்கவல்லி, ஆணையம்பட்டி, பள்ளக்காடு, சமத்துவபுரம், நடுவலூர், கூடமலை, 74 கிருஷ்ணாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது இதனால் பள்ளகாடு பகுதியில் காங்கமுத்துவின் விவசாய தோட்டத்தில் இரண்டு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார் அதில் ஒரு ஏக்கர் வாழை மரம் தாருடன் சூறைக்காற்றில் முறிந்த சாய்ந்து சேதமடைந்தது,
இதனால் விவசாயி காங்கமுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுளளதாக கவலயடைந்துள்ளார், மேலும் இதை வேளாண்மை துறை அதிகாரிகள் சேதத்தை ஆய்வுசெய்து இழப்பீடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்