சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூர் பிரிவு சாலையில் நேற்று கெங்கவல்லி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை போலீசார் நிறுத்தும்படி சைகை காட்டினார். ஆனால் பொலிரோ பிக் அப் வாகனம் போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த போலீசார் சினிமா பட பாணியில் மடக்கி பிடித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
விசாரணையில் வீரகனூர் வேத நதி கரையில் மணலை திருடி ஆணையம் பட்டி தெடாவூர் கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.