தலைவாசல் அண்ணனை கடத்தி சென்று தாக்கிய பல் மருத்துவர் கைது

74பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குரல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியினான மகன் சேகர் (45). என்பவருக்கு திருமணமான நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மனைவின் மகன் சின்னமணி (37). இவர் பல் மருத்துவராக சென்னையில் உள்ளார். செல்லமுத்து குறால் பகுதியில் 15 ஏக்கர் நிலம், 3 வீடு உள்ள நிலையில் சேகர் மற்றும் சின்னமணி ஆகிய இருவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்கனவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன் ஆத்தூர் செல்வதற்காக தலைவாசல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சொகுசு காரில் வந்த இருவர் காரில் கடத்தி பல் மருத்துவர் சின்ன மணி தனது அண்ணன் சேகரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியதில் அண்ணன் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கி விட்டு தலைவாசல் பகுதியில் சேகரை தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னையில் இருந்த பல் மருத்முவர்
சின்ன மணியை தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி