சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா படம் 25ம் தேதி கம்பம் நடுதல் பூச்சாட்டுதல் உடன் தொடங்கிய பண்டிகை மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது சுற்றுவட்டார பகுதிகளிலேயே மிகவும் விமர்சையாக கொண்டாடி வரும் இக்கோவில் பண்டிகை இந்த ஆண்டும் நடைபெற்றது பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி இழுத்து வந்தனர் முன்னதாக பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பூங்கரகம் அக்னி கரகம் மாவிளக்கு மற்றும் அழகு குத்தியும் கிடா கோழி பலியீட்டும் பெண்கள் பொங்கல் வைத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர் இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் புதுப்பட்டி மாரியம்மன் சுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்
வாழப்பாடி காரிப்பட்டி ஏத்தப்பூர் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.