சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டி மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் இவர் கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராம்குமார் இவர் மயிலாடுதுறையில் போக்குவரத்து ஆர். டி. ஓ வாக பணியாற்றி வருகிறார், இவரது வீட்டில் கடந்த சில தினகங்களுக்கு முன்பு முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி விரட்டி பணம், நகை கொள்ளை அடித்துச் சென்றனர், இந்த சம்பவத்தில் டிஐஜி உமா, எஸ் பி கௌதம் கோயல், ஆகியோர் நேரில் பார்வையிட்டு டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் முதல் கட்டமாக கார் டிரைவர் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்து கிடுக்கு பிடி விசாரணையில் கோவை சேர்ந்த விஜய் என்கிற விஜய் குமார் (40) ரவிக்குமார் (48) அஸ்வின் காந்த் (51) கோவை சேர்ந்த சந்தியா( 29)
கொள்ளையில் ஈடுப்பட்ட இரண்டாவதாக நான்கு பேரையும் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளியாகியுள்ளது இதில் விஜயகுமார் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் டிடெக்டிவ் ஏஜென்ட் என்பதும் தெரிய வந்தது. இவர்களை நான்கு பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் கிடைத்தனர்,