சேலம்: திமுகவினர் 5 மணி நேரம் காத்திருந்து உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு
சேலம் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிக்காக சேலம் வருகை புரிந்தார். இந்நிலையில் சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் நத்தக்கரை சுங்கச்சாவடியில் 2000க்கும் மேற்பட்ட திமுகவினர் சுமார் ஐந்து மணி நேரமாக காத்திருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளர்கள் நகர ஒன்றிய பேரூரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் சால்வை புத்தகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.