சேலம் கிழக்கு மாவட்டம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அனைத்து மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் டி கே எஸ் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கிளைகளிலும் திண்ணை கூட்டம் நடத்த வேண்டும், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.