120அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு

74பார்த்தது
சேலம்மாவட்டம், கெங்கவல்லியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வையாபுரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடியில் தண்ணீர் உள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மணி என்பவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்கவே அவ்வழியாக சென்று பொதுமக்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் தொடர்ந்து கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வலை மூலம் மணியை உயிருடன் மீட்டனர் சிறு காயம் அடைந்த மணியை தெடாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி