சேலம்: எம்.எல்.ஏ, ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை - தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

76பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் 117 பேர் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இதில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு மழைக்கால உபகரணங்கள் வழங்கவில்லை பழுதடைந்த பேட்டரி வாகனங்களை சீரமைக்க வழி இருக்கு காலை 6 மணி முதல் பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் நுழைவாயில் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்த நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் காரை மறித்தனர். காரில் இருந்து இறங்கி வந்த நகராட்சி ஆணையாளர் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் நகராட்சி ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். மேலும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஒப்பந்ததாரரை வரவழைத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என கடிந்து கொண்டார். தொடர்ந்து அவர்களுக்கு மழை கோட் வழங்கப்பட்டது. மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி