சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பத்மினி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்; அதிகாரிகள் யாரும் அடையாள அட்டை அணிந்து வருவதில்லை அரசு உத்தரவிட்டும் அதிகாரிகள் அடையாள அட்டை இணைந்து வருவதில்லை ஐந்தாண்டுகள் முடியப்போகிறது எங்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் ஈச்சம்பட்டி பகுதியில் 40 தொகுப்பு வீடுகள் உள்ளன இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பராமரிப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து பலமுறை கூட்டத்தில் வலியுறுத்தியும் சேதமடைந்த வீடுகளுக்கு பராமரிப்பு பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்கு அதிகாரிகள் சீரமைக்க தகுதியின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தனர் அதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வீடு சேதமடைந்ததை விட என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய கொத்தாம்பாடி ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் கூறும் பொழுது ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பருவ மழை பெய்து வருவதால் பள்ளிகளில் சுற்றி தண்ணீர் தேங்காத வண்ணம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.