தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் பெட்ரோல் இலவசம்

69பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் பெட்ரோல் இலவசம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தனியார் அறக்கட்டளை ஒன்று சுவாரஸ்ய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனையறிந்த பொதுமக்கள் இலவச பெட்ரோலை வாங்க கூட்டம் கூட்டமாக அலைமோதினர். டிடி தமிழ் தொலைக்காட்சி நடத்திய இந்தி மாத விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'திராவிட நல்திருநாடு' விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி