படம்மெடுத்தஜந்து அடிநல்லபாம்பு அலறியடித்து ஓடியபெண் பணியாளர்

61பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான தார் ரெடி மிக்ஸ் கம்பெனி இந்த கம்பெனியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவு சாப்பிட கேன்டீன் உள்ளது. இந்த கேண்டீனில் பணிபுரியும் பெண் ஒருவர் இன்று மதிய உணவு சமைப்பதற்காக உள்ளே சென்றபோது ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை எடுக்கும்போது பின்பகுதியில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்து பெண் எட்டிப் பார்த்துள்ளார் அப்போது நல்ல பாம்பு படம்பெடுக்க உடனடியாக குச்சலிட்டு வெளியே வந்துள்ளார். அங்கு பணி புரியும் கோபால் என்பவர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் பிரிட்ஜ் பின் பகுதியில் இருந்த ஜந்து அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை இடுக்கியில் உயிருடன் பிடித்தனர்.
பாம்பு பிடிபட்டத்தால் பெருமூச்சு விட்ட பணியாளர்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி