07 ம்தேதி ௯ட்ரோடு கால்நடைபூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் நல மேம்பாட்டு அமைப்பு மாநில தலைவர் பெருமாள் கூறும் பொழுது ; ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா முறையாக செயல்படாததால் தண்ணீர் வீணடிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சிப்காட்டிற்குதண்ணீர் கொண்டு செல்வதாக தகவல் வந்துள்ளது. 25, 000 பணியாளர்கள் வேலை செய்யக்கூடிய இடத்தை நான்கு ஆண்டுகளாக காலதாமதம் செய்துள்ளனர் முறையாக துவங்கினால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் உளுந்தூர் பேட்டை சிப்காட்டிற்கு நீர் எடுத்துச் செல்லப்படும் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை கால்நடை பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி