நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது போட்டிக்கான அணியில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்காக விளையாடி வரும் சுந்தர் விரைவில் அணியில் இணைவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணி தொடரும் என்று தெரிவித்துள்ளது.