சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி புலித்தோலை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல் மற்றும்ஆத்தூர் வன கோட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டு வனத்துறையினர் தலைவாசல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது தலைவாசல் மும்முடி பகுதியில்உள்ளதனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த மூன்று பேரிடம் விசாரணைமேற்கொண்டதில் அந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து அவர்களை தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர்கள் மணி விழுந்தான், பட்டுத்துறை கிராமங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து அந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டது அவர்கள் மணி விழுந்தான் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பெரிய பிள்ளை (41) ராபின் குமார், (25), மணி (67) என்பதும் அவர்கள் புலித்தோலை விற்பனை செய்ய முற்பட்டபோது சிக்கியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து புலித்தோல் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.