சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட முயல்கரடு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (45). ரிக் வண்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி கோபி (35). நெல் அறுவடை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான 700 சதுர அடி பரப்பில் நிலம் உள்ளது. இந்நிலையில் தம்பி கோபி அந்த நிலம் தனக்கு தான் வேண்டுமென அடிக்கடி அண்ணன் சின்னதுரையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 01 (அக்) நேற்று மது போதையில் அண்ணன் சின்னதுரை வீட்டில் தகராறு ஈடுபட்டுள்ளார். இதில் இருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சின்னதுரை வீட்டிலிருந்து காய் வெட்டும் கத்தியை எடுத்து தம்பி கோபியின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதில் மயங்கி விழுந்த கோபி நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சின்னதுரையை காவல்துறையினர் 02 (அக்) கைது செய்தனர்.