விஜயதசமியை முன்னிட்டு வெள்ளை பிள்ளையார் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி. இதில் குழந்தைகள் முதல் முறையாக பள்ளிகளில் சேர்ப்பவர்கள் இந்த நாளில் எழுத பழகும் போது குழந்தைகளுக்கு நல்ல குருவாக கிடைத்த அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும். என குலதெய்வம் இஷ்ட தெய்வம் ஆகியவற்றை மனதார முதலில் வேண்டிக் கொள்ள வேண்டும் பிறகு ஒரு தட்டில் நெல் அல்லது அரிசி பரப்பி அதில் குழந்தைகளை எழுத வைக்க வேண்டும்.
விஜயதசமியை முன்னிட்டு கல்வி கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வெள்ளைபிள்ளையார் கோவிலில் காலை முதலே
விஜயதசமி முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியில்
பச்சரிசியில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அரிசியில் முதல் எழுத்துக்களை எழுதி மகிழ்ச்சி அடைந்தனர். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து குழந்தைகளை ஈடுபடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.