ரத்ததான முகாம்

77பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேவியாக்குறிச்சி தனியார் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவை, பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை ஆத்தூர் வட்டாட்சியர் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தங்கள் ரத்தத்தை தானமாக வழங்கினார்கள். ரத்த தானம் வழங்கிய மாணவிகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் சான்றுதலும் வழங்கப்பட்டு மாணவிகளுக்கு ரத்ததானம் வழங்குவதால் ஒரு உயிரைக் காப்பாற்றுவதாகவும் இந்த ரத்த தானம் வழங்குவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்று குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் ஜோசப்தளியத் மற்றும் பாரதியார் கல்வி நிறுவனங்களில் தலைவர் இளையப்பன், செயலாளர். ஏகே ராமசாமி, மகாத்மா பண்பாட்டு பேரவை தலைவர் சுந்தரம், ரெட் கிராஸ் சொசைட்டி சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி