திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி (46), சாந்தி (45), அலுமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகியோர் மழையின் போது முளைத்து காளானை சமைத்து சாப்பிட்டதால் ஐவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ஐவரும் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.