சிங்கம்புணரி பாலாற்றில் கரைபுரண்டு ஒடும் வெள்ளம்

79பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சிங்கம்புணரி திருப்பத்தூர் பகுதிமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் செந்துறை, நத்தம் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் பாலாறும் உப்பாறும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இணைந்து பாலாறு என்ற பெயரில் திருப்பத்தூர் கன்மாயை அடைகிறது அங்கிருந்து விருசுழிஆறாக பெருக்கெடுக்கிறது பாலாற்றில் கடந்த 2005 ஆம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு பாலாற்றில் தண்ணீர் ஓடியது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செந்துறை, நத்தம் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது சிங்கம்புணரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது பாலாற்றில் வெள்ளம் போவதால் அதை பார்ப்பதற்காக காளாப்பூர், வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள பாலங்களில் பொதுமக்கள் நின்று ரசித்து வருகின்றனர் மேலும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடும் நிலையில் பாலாறு பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவை மரங்களால் கண்மாய் பகுதிகளுக்கு மழை நீர் செல்வதில் சிக்கல் உள்ளது வெள்ளி நீர் கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி