திருப்பத்தூரில் கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு

51பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய விழிப்புணர்வு நடைபயணம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் இன்னும் தூய்மையை மேம்படுத்த வேண்டும் என்றவர், மறுசுழற்சி செய்வதை அதிகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், உலக வல்லரசை காட்டிலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் உள்ளதாகவும். இந்தியா முழுவதும் உள்ள 6 கோடி தெரு நாய்களால், பலர் கடிபடுவதும், விபத்தில் சிக்குவதும் நடைபெற்று வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கியது பத்தாது. அதற்கான விளக்கத்தை அரசு வழங்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் எம். பி. தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி