திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: ஶ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில் நவராத்திர திருவிழா

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு சரஸ்வதி தேவி அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக மூலவர் குழந்தை வேலாயுத பெருமாளுக்கும் விபூதி காப்பு அலங்காரம் நடந்தன தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொழுமண்டபத்தில் ஒன்பதாம் திருநாளில் அம்பிகை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. கோடி தீபம், கும்ப தீபம், நாகதீபம் காண்பித்து நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி தேவியை வழிபட்டனர்.

வீடியோஸ்


சிவகங்கை
Oct 12, 2024, 07:10 IST/காரைக்குடி
காரைக்குடி

காரைக்குடியில்மழைநீர் மூழ்கி ஒருவர் பலி

Oct 12, 2024, 07:10 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது இந்த கனமழையின் அறியக்குடி ரயில்வே கேட்ட அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் முழுவதுமாக நிறைந்துள்ள அதில் மூழ்கி ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த பீட்டர் வயது (50) என்பவர் உயிரிழந்தார் தீயணைப்பு துறையினர் மோட்டார் மூலம் தண்ணியை வெளியேற்றி இறந்த நபரை மீட்டனர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் முழுவதும் நிரம்பி உள்ளதால் ரயில்வே காலனி லட்சுமி நகர் பொன் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது அது போல் காளவாய் பொட்டல் உதயம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகத்தினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீட்டில் உள்ளவர்கள் வீடுகளுக்குள் இருக்கும் வெள்ள நீரை வாலி குடம் போன்றவற்றை கொண்டு வெளியில் அள்ளி ஊற்றி வருகின்றனர் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவும் சாக்கடை கழிவுநீரும் கலந்து வருவதாகவும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனஅதுபோல் காரைக்குடி கம்மாய் நிறைந்துள்ளதால் கம்மாயை திறந்து விடும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.