முதியோர் பராமரிப்பு உதவியாளர் படிப்பிற்கு, விண்ணப்பிக்கலாம்

72பார்த்தது
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 மாத கால முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் படிப்பு (Certificate Course for Elderly Care Support Assistant) புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி மற்றும் விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும், இச்சான்றிதழ் படிப்பிற்கு கல்வி கட்டணம் ஏதுமில்லை. அதுமட்டுமன்றி, இச்சான்றிதழ் படிப்பிற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்திடல் வேண்டும்.
எனவே, முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர்கள் உரிய சான்றிதழ்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று மதியம் சுமார் நான்கு முப்பது மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி