திருப்பத்தூரில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

56பார்த்தது
பொதுவாக கோடை என்றாலே ஏப்ரல் மே மாதம் தான். இம்மாதங்களில் தான் வறண்ட சூழ்நிலையும் வெப்பத்தின் தாக்கமும் அதிக அளவில் காணப்படும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கோடை வெப்பத்தை போன்ற தாக்கம் அதிக அளவு காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிகப்படியான வெப்பம் மக்களை தொடர்படியாக வாட்டி வந்தது. மேலும் தொடர்படியாக கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேல் மழையின் வருகை முற்றிலுமாக இல்லாமல் கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று மதியம் வெப்ப சலனம் காரணமாக கரு மேகங்களுடன் இருள் சூழ்ந்த நிலையில் பலத்த காற்றுடன்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தெருக்கள் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இக்கனமழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த சீதோசன நிலையை அடைந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி