சிவங்கை: பயிர்களில் பூச்சி வெட்டு அதிகரிப்பு
சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பிரான்மலை, எஸ். எஸ். கோட்டை, எஸ் புதுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். பருவ மழை தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரியாத பட்சத்தில் பலரும் தாமதமாகவே நடவுப் பணிகளை துவக்கினர். இந்நிலையில் ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 10 நாட்களில் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பூச்சித்தாக்குதலால் செடிகள் லேசான பழுப்பு நிறமாக மாறி வருகிறது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு தேவையான பூச்சி மருந்துகளை இப்போதே வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஆரம்பத்திலேயே பூச்சி தாக்குதல் காணப்படுவதால் அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.